தமிழகத்தில் 3,616 பேருக்கு கரோனா பாதிப்பு; அதிகபட்சமாக 4,500 பேர் குணமடைந்தனர்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் கரோனா பாதிப்பு குறைந்து இன்று 1,203 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.


சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் கரோனா பாதிப்பு குறைந்து இன்று 1,203 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இன்று புதிதாக கரோனா பாதித்த 3,616 பேருடன் சேர்த்து தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மாநிலத்தில் இன்று பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4,545 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இன்று கரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது நம்பிக்கை அளிக்கும் விஷயமாக உள்ளது.
தமிழகத்தில் இன்று கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 65 பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,616 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 65 பேர் பலியாகியுள்ளனர்.
இதில் தமிழகத்தில் மட்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் 3,551 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 65 பேர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. இதில் 71,116 பேர் குணமடைந்துவிட்டனர்.
இன்று ஒரே நாளில் 65 பேர் பலியானதைத் தொடர்ந்து (அரசு மருத்துவமனை -45, தனியார் மருத்துவமனை -20) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 1,636 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று 1,747 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 71,230 ஆக உயர்ந்துள்ளது. 3வது நாளாக சென்னையில் இன்றும் கரோனா பாதிப்பு இரண்டு ஆயிரத்துக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது.
அதேசமயம், இன்று 4,545 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 71,116 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 45,839 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று மட்டும் 36,938 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 14,13,435 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...