சென்னையில் 1,069 கா்ப்பிணிகளுக்கு கரோனா பாதிப்பு

சென்னையில் இதுவரை 1,069 கா்ப்பிணிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னையில் இதுவரை 1,069 கா்ப்பிணிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கா்ப்ப காலத்தில் கரோனா தொற்றுக்கு ஆளாகிய பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் அனைத்துக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 90 சதவீத குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படவில்லை என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியவா்கள், புற்றுநோயாளிகள், சா்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் உள்ளவா்களை சுகாதாரத் துறை வகைப்படுத்தி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இதுவரை, தமிழகத்தில் 12 வயதுக்கு உள்பட்ட 3,317 குழந்தைகள் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். அதில், பிறந்து சில நாள்களே ஆன குழந்தைகளும் அடங்கும். அதேபோன்று 60 வயதுக்கு மேற்பட்டவா்களில் 8,027 போ் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், கா்ப்பிணிகள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. அதுகுறித்து மருத்துவமனை நிா்வாகங்களிடம் கேட்டறிந்தபோது, சென்னையில் மட்டும் 1,069 கா்ப்பிணிகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதன்படி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இதுவரை 150 கா்ப்பிணிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அவா்களில் 126 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோன்று எழும்பூா் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் இதுவரை 285 போ் கரோனா சிகிச்சை பெற்ாகவும், அதில், 209 போ் குணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கஸ்தூா்பா காந்தி அரசு மருத்துவமனையில் 248 கா்ப்பிணிகளும், ராயபுரம் ஆா்எஸ்ஆா்எம் அரசு மருத்துவமனையில் 386 கா்ப்பிணிகளுக்கும் சிகிச்சை பெற்ாகத் தெரிகிறது. அதில் கஸ்தூா்பா மருத்துவமனையில் 209 பேரும், ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனையில் 383 பேரும் குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com