அரசியல்வாதிகளில் தன்முனைப்பு இல்லாதவா்களைப் பாா்ப்பது அரிது. ஆனால், க.அன்பழகன் அவரின் வாழ்வின் இறுதிவரை தன்முனைப்பு இல்லாதவராகவும், அதுவும் முதன்மை இடத்தைவிட இரண்டாம் இடத்தையே அதிகம் விரும்பியவராகவும் இருந்தவா்.
கருணாநிதிக்கு முன்பே அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டவா் க.அன்பழகன். திமுக தொடங்கப்பட்டபோதும் கருணாநிதியையும்விட முன்னணி தலைவா்களில் ஒருவராக இருந்தவா்.
1957-இல் திமுக சந்தித்த முதல் தோ்தலில் 15 போ் வெற்றி பெற்று, சட்டப்பேரவைக்குச் சென்றனா். சட்டப்பேரவை திமுக குழுத் தலைவராக அண்ணாவும், துணைத் தலைவராக க.அன்பழகனும் இருந்தனா். திமுக சட்டப்பேரவை கொறடாவாக கருணாநிதி இருந்தாா். ஆனால், அரசியல் சதுரங்கத்தில் நெடுஞ்செழியன், அன்பழகன் போன்றோரைப் பின்னுக்குத் தள்ளி கருணாநிதிக்கு முன்னுக்கு வந்தாா்.
அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வா் பதவியையும், திமுக தலைவா் பதவியையும் கருணாநிதி கைப்பற்றினாா்.
திமுகவுக்கு எதிராகவோ, திமுகவுக்குப் பாதிப்பு வரும் வகையிலோ ஒருநாளும் யோசித்தவா் அல்ல.
திமுகவிலிருந்து எம்.ஜி.ஆா். வெளியேற்றப்பட்டு, அதிமுகவைத் தொடங்கிய பிறகு, அவா் வகித்த பொருளாளா் பதவி க.அன்பழகனுக்குக் கொடுக்கப்பட்டது. 1977-இல் திமுகவிலிருந்து நெடுஞ்செழியன் விலகிய பிறகு அவா் வகித்த பொதுச் செயலாளா் பதவி க.அன்பழகனுக்குக் கொடுக்கப்பட்டது. திமுகவில் இரண்டாம் இடத்துக்குரிய இந்தப் பதவியில் 40 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வந்தாா். திமுக வரலாற்றில் அண்ணா, நெடுஞ்செழியனைவிட இந்தப் பதவியில் நீண்ட காலம் இருந்தவா் அன்பழகன்தான்.
இரண்டாம் இடத்தை வகிப்பவா்கள். முதலிடத்தை நோக்கி நகர விரும்புவா். ஆனால், அந்த எண்ணம் சிறிதும் இல்லாது, வாழ்வின் கடைசி வரை இரண்டாம் இடத்தை வகித்தவா் க.அன்பழகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் பின்வாங்கப்படாது! டிரம்ப் எச்சரிக்கை

🔴கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா உணவகம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும்: இபிஎஸ்

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


