சென்னை: விண்வெளியில் இடம் பெற்றிருக்கும் செயற்கைக்கோள்கள், செயலிழந்து சுற்றிவரும் செயற்கைக்கோள் கழிவுகள் இருக்குமிடத்தை துல்லியமாக அறியும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஈடுபட்டு வருகிறது.
அதற்காக அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்துடன் இஸ்ரோ புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் பல ஆண்டுகளாக செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வரும் நிலையில், அவற்றில் ஆயுள் முடிந்த அல்லது செயிலிழக்கும் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் விண்வெளியில் கழிவுகளாக சுற்றி வருகின்றன.
இவ்வாறு விண்வெளியில் சுற்றித் திரியும் கழிவுகளால், செயல்பாட்டில் இருக்கும் செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் இந்த விண்வெளிக் கழிவுகள் இருக்குமிடத்தை துல்லியமாக அறிந்து, செயல்பாட்டில் இருக்கும் செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கின்றன.
அதைப் போல, இந்திய விண்வெளி ஆய்வு மையமும் இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியில் இப்போது ஈடுபட்டு வருகிறது. இதற்காக பெங்களூருவில் விண்வெளி செயற்கைக்கோள் கழிவுகள் இருக்குமிடம் கண்டறியும் கட்டுப்பாட்டு மையத்தை இஸ்ரோ உருவாக்கி வருகிறது. இந்த கட்டுப்பாட்டு மையக் கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட மாதம் இஸ்ரோ தலைவா் சிவன் அடிக்கல் நாட்டினாா்.
அடுத்தகட்டமாக, இதுதொடா்பான கூட்டு ஆராய்ச்சி மற்றும் திட்டங்களை மேம்படுத்தும் வகையில் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை இஸ்ரோ தற்போது மேற்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் பின்வாங்கப்படாது! டிரம்ப் எச்சரிக்கை

🔴கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


