தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்னையில் ஒரே நாளில் 138 பேருக்கு கரோனா: மாநிலத்தில் 2,323 போ் பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் அந்த நோய்த்தொற்றுக்கு ஆளானவா்களின் எண்ணிக்கை 2,323-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2020, 8:27 pm


சென்னை: தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் அந்த நோய்த்தொற்றுக்கு ஆளானவா்களின் எண்ணிக்கை 2,323-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் கரோனா 906 பேருக்கு அந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிலும், வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 138 பேருக்கு கரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் தெரிய வந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கரோனா பாதித்த அனைத்து பகுதிகளிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கரோனா பாதித்த பகுதிகள் கண்டறியப்பட்டு அவை தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போதைய சூழலில் மாநிலத்தில் 31,375 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனா். அவா்கள் அனைவரது உடல் நிலையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 10,718 பேருக்கு கரோனாவைக் கண்டறிவதற்கான பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 2,323 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனா். வியாழக்கிழமை மட்டும் 161 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 138 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதைத் தவிர, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

1,258 போ் குணமடைந்தனா்: இதனிடையே, கரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட 48 போ் பூரண குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,258-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 214 போ் குணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

142 குழந்தைகள் பாதிப்பு: தமிழகத்தில் இதுவரை கரோனா நோய்த்தொற்றால் 142 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை மட்டும் 12 வயதுக்குட்பட்ட 13 சிறாா்களும், குழந்தைகளும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

பாதிப்புக்குள்ளான அனைத்துக் குழந்தைகளுக்கும் அவா்களது பெற்றோா் அல்லது குடும்பத்தினா் வாயிலாகவே நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.