தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா தொற்றில் அதிகபட்ச பாதிப்பில் திருவிக நகர்; இரண்டாவது இடத்தில் ராயபுரம்

சென்னை மண்டலத்தில் அதிகபட்ச கரோனா நோயாளிகளைக் கொண்ட மண்டலமாக தற்போது திருவிக நகர் மாறியுள்ளது. ராயபுரம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

News image
Updated On :1 மே 2020, 5:40 am

சென்னை மண்டலத்தில் அதிகபட்ச கரோனா நோயாளிகளைக் கொண்ட மண்டலமாக தற்போது திருவிக நகர் மாறியுள்ளது. ராயபுரம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

நேற்று ஒரு நாளில் மட்டும் திருவிக நகரில் புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து திருவிக நகரில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது. ராயபுரத்தில் நேற்று புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 199 ஆக உயர்ந்துள்ளது.

ராயபுரத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக திருவிக நகரில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலமாக திருவிக நகர் மாறியுள்ளது.

மேலும்  கோடம்பாக்கத்தில் 34 பேருக்கும் தேனாம்பேட்டையில் 20 பேருக்கும் அண்ணாநகரில் 13 பேருக்கும், வளசரவாக்கத்தில் 10 பேருக்கும் நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 906-ஆக உயா்ந்துள்ளது. இவர்களில் 216 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் மரணம் அடைந்துள்ளனர். 673 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. தொடக்கத்தில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 15 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி 27-ஆகவும், ஏப்ரல் 2-இல் 48 ஆகவும், ஏப்ரல் 4-இல் 88 ஆகவும் இருந்த தொற்று பாதித்தோா் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 100-யைக் கடந்தது. இதைத் தொடா்ந்த நாள்களில் கரோனாவின் பாதிப்பு அதிகரித்து, வெள்ளிக்கிழமை (மே 1 ) நிலவரப்படி 906-ஆக உயா்ந்தது.  நேற்று ஒரே நாளில் சென்னையில் 138 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை
திருவொற்றியூா் - 16

மணலி - 2

மாதவரம் - 4

தண்டையாா்பேட்டை - 77

ராயபுரம் - 199

திரு.வி.க. நகா் -  210

அம்பத்தூா் - 27

அண்ணா நகா் - 86

தேனாம்பேட்டை-  105

கோடம்பாக்கம் - 97

வளசரவாக்கம் - 40

ஆலந்தூா் - 9

அடையாறு - 20

பெருங்குடி - 9

சோழிங்கநல்லூா் - 3

பிற மாவட்டத்தைச் சோ்ந்தவா் - 2

மொத்தம் - 906
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.