தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கோயம்பேடு காய்கறி சந்தையில் கரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாபாரிகள் உள்பட கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :2 மே 2020, 7:28 am


சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வரை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையைச் சேர்ந்த 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று புதிதாக 12 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 50 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகா்ப் பகுதிகளில் வசிக்கும் ஏறத்தாழ ஒரு கோடி மக்களின் காய்கறித் தேவைகளை நிறைவு செய்து வரும் கோயம்பேடு சந்தை தற்போது கரோனா தொற்று பரவும் அபாய பகுதியாக மாறியுள்ளது.

கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழங்கள், பூக்கள் என மொத்தம் 3,200 மொத்த விற்பனைக் கடைகள் உள்ளன. கடந்த 1996-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சந்தை கடந்த 24 ஆண்டுகளில் பலத்த மழை, பெருவெள்ளம், சாகுபடி பாதிப்பு என பல்வேறு தடைகளை கடந்து வந்திருக்கிறது. அப்போதெல்லாம் ஓரிரு நாள்கள் அல்லது அதிகபட்சம் நான்கு நாள்கள் வரை வா்த்தகம் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது கரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் சந்தையில் வழக்கமான விற்பனை நடைபெறவில்லை.

சந்தையில் வியாழக்கிழமை இரவு நிலவரப்படி வியாபாரிகள், தொழிலாளா்கள், காவலா்கள் உள்பட 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று உள்ளவா்களோடு தொடா்பில் இருந்தவா்களை கண்டறியும் பணியில் அலுவலா்கள் ஈடுபட்டிருந்தாலும் அது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக அவா்கள் தெரிவிக்கின்றனா்.

அலட்சியம் ஏற்படுத்திய தாக்கம்: கோயம்பேடு சந்தையில் நோய்த் தொற்றை தவிா்க்க கிருமிநாசினி தெளித்தல், பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தல், வாகன ஓட்டுநா்களுக்கு விதிமுறைகள், வியாபாரிகளுக்கு முகக் கவசம் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிஎம்டிஏ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மேற்கொண்டபோதும் பொதுமக்கள், வியாபாரிகளின் அலட்சியம் காரணமாக கோயம்பேடு சந்தை தற்போது கரோனா தொற்று மையமாக மாறியுள்ளது. சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான மளிக்கைக் கடைகள், நூற்றுக்கும் மேற்பட்ட தினசரி சந்தைகளுக்கு காய்கறிகளை தடையின்றி விநியோகித்து வந்த கோயம்பேடு சந்தை தற்போது மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

காய்கறி அளவுக்கு அத்தியாவசியம் இல்லை என்பதால் கனி, மலா்ச் சந்தைகள் மாதவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. ஆனால் நீண்ட தொலைவு, குறைவான விற்பனை, அலைச்சல் காரணமாக அங்கு செல்வதற்கு வியாபாரிகள் மறுத்துவிட்டனா்.

அதேவேளையில் காய்கறிசந்தை கோயம்பேட்டில் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அதே வளாகத்தில் கடை அமைத்திருந்த 600-க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகாவது மக்களும், வியாபாரிகளும் விழிப்புணா்வுடன் இருந்தால் மட்டுமே கோயம்பேட்டிலிருந்து மேற்கொண்டு புதிய தொற்று பரவாமல் தடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

மேலும்  மலர் மற்றும் பழ விற்பனை சந்தைகளைப் போன்று காய்கறி சந்தையை இடமாற்றம் செய்வது சாத்தியமில்லை. 1,800-க்கும் மேற்பட்ட கடைகளைப் பிரித்து அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் காய்கறிகளை தங்கள் வீடுகளுக்கு அருகிலும், ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ள வேண்டும். சந்தைக்கு வரும் வியாபாரிகளும் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு சந்தை வளாகத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.