காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள் குறித்து ஆலோசனை: ஆளுநர் மாளிகை தகவல்

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசித்ததாக ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. 

News image

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

Updated On :5 நவம்பர் 2020, 10:24 am

DIN

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசித்ததாக ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

'அரசுப் பயணமாக தில்லி சென்ற தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், புதன்கிழமை பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதேபோன்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கையும் சந்தித்துப் பேசினார். 

தொடர்ந்து, இன்று (வியாழக்கிழமை) காலை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதித்தார்' என்று கூறப்பட்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.