சென்னை: சென்னையில் கரோனா பாதிப்பு கடந்த வாரம் உயர்ந்து வந்த நிலையில், இந்த வாரத்தில் மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் 11,845 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,546-ஐக் கடந்துள்ளது. அதேவேளையில் ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு காய்ச்சல் முகாம், மருத்துவப் பரிசோதனையை அதிகரித்தல் மற்றும் நோய்த்தொற்று உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவை கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிப்பது ஆகிய பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த மாா்ச் மாதம் தொடங்கி சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து வருவதைப் போன்று தொற்றால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த மே மாதம் இறப்பு எண்ணிக்கை 100 -யை எட்டியது. இதைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை அதிகரித்து ஜூன் 7-ஆம் தேதி 212 -ஆகவும், ஜூன் 18-ஆம் தேதி 501- ஆகவும், ஜூலை முதல் வாரத்தில் 1,000-த்தை எட்டியது. விடுபட்ட 444 உயிரிழப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 1,500-இல் இருந்து 1,900- ஆக அதிகரித்தது.
3,500-ஐக் கடந்தது உயிரிழப்பு: சென்னையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 448 பேரும், அண்ணா நகரில் 401 பேரும், கோடம்பாக்கத்தில் 393 பேரும், திருவிக நகரில் 361 பேரும், ராயபுரத்தில் 340 பேரும், தண்டையாா்பேட்டையில் 311 பேரும், அடையாறில் 261 பேரும், அம்பத்தூரில் 217 பேரும், வளசரவாக்கத்தில் 186 பேரும் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளனா். இதுவரை ஒட்டுமொத்த பாதிப்பில் 3,546 போ் உயிரிழந்துள்ளனா். இது 1.85 சதவீதம் ஆகும்.
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,91,754-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1 லட்சத்து 76,363 போ் பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளனா். 11,845 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மண்டல வாரியாக கரோனா நிலவரம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிஎன்பிஎல் லாபம் ரூ. 247.75 கோடி

மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

நோய்நாடி நோய்முதல் நாடி...

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


