தமிழகத்தில் புதிதாக 5,560 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செப்.17, வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,560 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 5,555. வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 5 பேர். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 5,25,420 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 992 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய செய்திக் குறிப்பில், மேலும் 59 பேர் (அரசு மருத்துவமனை-36, தனியார் மருத்துவமனை -23) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 8,618 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று ஒரேநாளில் 5,524 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,70,192 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, 46,610 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு இன்று அதிகபட்சமாக 84,524 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 62,17,923 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
கரோனா பரிசோதனைக்காக அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 108 என மொத்தம் 174 பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


