சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பெரிய குழுக்களால் எந்த பயனுமில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே.. 57 பொதுச் செயலர்கள், 104 செயலர்கள்! தமிழ்நாடு காங்கிரஸில் தடாலடி
தமிழக காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகளை நியமித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது, இவ்வளவு பெரிய கமிட்டியால் எந்த பயனுமில்லை. 32 துணை தலைவர்கள், 57 பொது செயலாளர்கள், 104 செயலாளர்கள் என நியமிக்கப்பட்ட யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது, அதிகாரம் இல்லாததால் யாருக்கும் பொறுப்பு என்பது இருக்காது என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாமே.. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகிகள் நியமனம்: வசந்தகுமாரின் மகன் பொதுச் செயலாளர்
ஒரு சில நிர்வாகப் பொறுப்புகளில் கார்த்தி சிதம்பரமும், பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் ப. சிதம்பரமும் உள்ள நிலையில், இந்த விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







