உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகளால் சாலைகள் சேதமாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் வசிக்கும் சுமார் 4 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக லேயர் கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் முல்லைப்பெரியற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக 18 வார்டுகளில் குழாய் அமைத்து அதன் மூலமாக பொதுமக்களுக்கு 3 நாளுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால், பல வார்டுகளில் பூமிக்கு கீழே செல்லும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. அதன்படி, 5 ஆவது வார்டு பி.டி.ஆர் காலனி, தென்னகர் காலனியில் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலைகள் சேதமாகி வருகிறது.
சமீபத்தில் சுமார் 3 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலைகள் ஒரு சில மாதங்களிலே சேதமாகி வருவதால் பேரூராட்சியில் குடிநீர் குழாய் உடைப்புகள் நிரந்தரமாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










