அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்: ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தை முன்னிட்டு போடியில் ஞாயிற்றுக்கிழமை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு அமைப்பினர் பேரணியாக சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News image

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தை முன்னிட்டு போடியில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Updated On :3 ஜனவரி 2021, 1:05 pm IST

போடி:  வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தை முன்னிட்டு போடியில் ஞாயிற்றுக்கிழமை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு அமைப்பினர் பேரணியாக சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர்களில் முக்கிய இடம் பெற்றவர் வீரபாண்டிய கட்டபொம்மன். தென் மாவட்டங்களில் மதுரையை அடுத்து தேனி மாவட்டம் போடியில்தான் கட்டபொம்மன் சிலை அமைந்துள்ளது. சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டவராக கருதப்படும் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்த தினம் தேனி மாவட்டம் போடியில் கொண்டாடப்பட்டது.

அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபன்னீர்செல்வம் போடியில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கட்டபொம்மன் சிலைக்கு நாயுடு, நாயக்கர் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல்  போடி, தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட தேனி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்களும், திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் போடிக்கு வந்து கட்டபொம்மன் பிறந்த தினத்தில் கலந்து கொண்டனர்.

போடி  கட்டபொம்மன் பண்பாட்டு கழகம், நாயுடு, நாயக்கர் பேரவையினர் உள்ளிட்ட அமைப்பினர் ஊர்வலமாக கட்டபொம்மன் சிலைக்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பாரம்பரிய கலைகளான உருமி மேளம், தேவராட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.  

போடி ஜக்கமநாயக்கன்பட்டி, பொட்டிப்புரம், கரட்டுப்பட்டி, சூலப்புரம் பகுதியை சேர்ந்தவர்களும் தேவாரட்டம் ஆடிக்கொண்டு ஊர்வலமாக வந்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.  இதேபோல்  பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்களும் மாலை அணிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.