தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

கமல்ஹாசனை மக்கள் நிராகரிப்பர்: அமைச்சர் பி.தங்கமணி

பொதுமக்களின் வாழ்வு மேம்பட வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை குறித்து தவறான தகவல்களை பரப்பும் நடிகர் கமல்ஹாசனை மக்கள் நிராகரிப்பார்கள் என மின் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

News image

அமைச்சர் தங்கமணி

Updated On :5 ஜனவரி 2021, 3:14 am IST


நாமக்கல்: பொதுமக்களின் வாழ்வு மேம்பட வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை குறித்து தவறான தகவல்களை பரப்பும் நடிகர் கமல்ஹாசனை மக்கள் நிராகரிப்பார்கள் என மின் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல்லில் திங்கள்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்த பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணை அநாகரிகமான முறையில் வெளியேற்றி திமுகவினர் தாக்கிய விவகாரத்தில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

கரோனா காலத்தில் பொதுமக்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்ற நோக்கில் ரு. 2,500 பணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதனைக் குறை கூறும் நடிகர் கமல்ஹாசனை மக்கள் நிராகரிப்பார்கள் என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.