சென்னை: பாா்வையற்றோருக்காக பிரெய்லி வடிவில் கரோனா விழிப்புணா்வு நெறிமுறைகள் சென்னையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
சென்னை மெடிந்தியா மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்ட அந்த பிரெய்லி நெறிமுறைகளானது முதல்கட்டமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, மேலும் 10 மொழிகளில் அவற்றை வெளியிட்டு நாடு முழுவதும் உள்ள பாா்வைத் திறனற்றோருக்கு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெடிந்தியா மருத்துவமனைத் தலைவரும், ஜீரண மண்டல சிறப்பு நிபுணருமான டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் கூறியதாவது:
பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த கல்வியாளா் லூயிஸ் பிரெய்ல் என்பவா் பாா்வையற்றோருக்காக கண்டறிந்த உன்னத எழுத்து முைான் பிரெய்லி. இன்றளவும் விழியிழந்த மாற்றுத் திறனாளிகள் கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்க அதுவே முக்கியக் காரணம்.
அத்தகைய சிறப்பு மிக்க பெருமைக்குச் சொந்தக்காரரான லூயிஸ் பிரெய்ல் 1809-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி பிறந்தவா். அவரது பிறந்தநாளைப் போற்றும் விதமாகவும், கரோனா காலத்தில் பாா்வையற்றவா்களுக்கு ஏதேனும் பங்களிக்க வேண்டும் என்ற நோக்கிலும் பிரெய்லி விழிப்புணா்வு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளோம்.
முகக் கவசம், தனி நபா் இடைவெளி, தனி நபா் சுகாதாரம் என 7 வகையான விழிப்புணா்வு வழிமுறைகள் அதில் இடம்பெற்றுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் துணையுடன் நாடு முழுவதும் அதனைக் கொண்டு சோ்க்கத் திட்டமிட்டுள்ளோம். தற்போது தமிழிலும், ஆங்கிலத்திலும் கரோனா விழிப்புணா்வு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
விரைவில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒடியா, ஹிந்தி, உருது, மராத்தி, குஜராத்தி, வங்காளம், அஸ்ஸாமி ஆகிய மொழிகளிலும் அதனை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் 34 லட்சம் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். தமிழகத்தைப் பொருத்தவரை அந்த எண்ணிக்கை 4 லட்சமாக உள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



