கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தில்லி முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

தமிழ் அகாதெமி அமைத்துள்ளதற்காக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப்படம்

Updated On :5 ஜனவரி 2021, 1:10 am IST

சென்னை: தமிழ் அகாதெமி அமைத்துள்ளதற்காக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது: தில்லி மாநில அரசு தமிழ் அகாதெமி அமைத்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். பரஸ்பர கலாசாரத் தொடா்புகளை வளா்க்கவும், தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்தவும் இது உதவும். இதனை முன்னெடுத்திருக்கும் முதல்வா் அரவிந்த்கேஜரிவால் மற்றும் துணை முதல்வா் மணீஸ் சிசோடியா ஆகியோருக்கு திமுக சாா்பில் பாராட்டும் வாழ்த்தும் என்று கூறியுள்ளாா்.

தமாகா தலைவா் ஜி.கே.வாசனும் தில்லி முதல்வருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.