துறையூர்: துறையூர் அருகே கோட்டாத்தூர் ஊராட்சியின் வருவாய் (வரவு) மற்றும் செலவு குறித்த துண்டுப் பிரசுரத்தை, ஊராட்சித் தலைவர் பொதுமக்களிடம் நேரில் வழங்கினார்.
முசிறி ஒன்றியத்தைச் சேர்ந்தது கோட்டாத்தூர் ஊராட்சி. இதன் தலைவராக பா. திருமூர்த்தி உள்ளார். இவர் இந்த ஊராட்சியின் தலைவராகத் தேர்வாகி அந்தப் பொறுப்பை ஏற்று புதன்கிழமையுடன் (ஜன.6) ஒரு வருடம் நிறைவடைந்தது.
இதனையடுத்து வெளிப்படையான நிர்வாகம் செய்ய விரும்பவதாகக் கூறி கடந்த 6.1.2020 முதல் 6.1.2021 வரை கோட்டாத்தூர் ஊராட்சியின் வருவாய் (வரவுகள்) மற்றும் செலவுகள் விவரம் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தை புதன்கிழமை வழங்கினார்.
அதில், "மாநில நிதிக் குழு நிதி ரூ. 6,83,286, மத்திய நிதிக் குழு நிதி ரூ. 2,00,000 சேர்த்து, வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, வீட்டு மனைப் பிரிவு அனுமதிக் கட்டணம், சந்தை ஏலம், வங்கி வழங்கிய வட்டி உள்ளிட்ட இனங்களின் மூலம் ஊராட்சியின் வருவாய் ரூ. 16,98,951.
நீர்த் தேக்கத் தொட்டிகள், குடிநீர் விநியோகக் குழாய், தெருவிளக்கு, கைபம்பு ஆகியவற்றின் பராமரிப்பு மற்றும் ஊராட்சிப் பணியாளர்களின் ஊதியம் உள்ளிட்ட இனங்களுக்கு செய்யப்பட்ட செலவு ரூ. 16,14,185.
கோட்டாத்தூர் ஊராட்சியின் நிர்வாகம் குறித்த அனைத்து நிர்வாக விபரங்களையும் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஊழலற்ற ஊராட்சியை உருவாக்குவோம் என்று அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தை ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் திருமூர்த்தி நேரில் சென்று வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூன்றடைப்பு, மூலைக்கரைப்பட்டி, மானூா், வன்னிக்கோனேந்தல் சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

பொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம்

‘தென் மேற்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்கவேண்டும்’
கல்லூா் சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

