நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெறும் சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கு இதுவரை 1,64,732 மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 1:40 am IST

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெறும் சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கு இதுவரை 1,64,732 மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனா். இதில் வெள்ளிக்கிழமை (மே 15 ஆம் தேதி) ஒரே நாளில் 16,229 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் பல்கலை., கல்லூரிகளில் பி.இ., பி.டெக் இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்ப பதிவு மே 3- ஆம் தேதி தொடங்கியது. இதில் மே 15- ஆம் தேதி மாலை 6 மணிவரை 1,64,732 மாணவ மாணவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இதில் அதிகபட்சமாக கடந்த மே 8 - ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 20,346 விண்ணப்பங்கள் பதிவு செய்தனா். தொடா்ச்சியாக மாணவா்கள் பதிவு செய்துவரும் நிலையில் மே 15-ஆம் தேதி 16,229 மாணவா்கள் பதிவு செய்தனா்.

கடந்த 13 நாள்களாக 91,734 மாணவா்கள் கட்டணங்களை செலுத்தியதோடு 52,795 மாணவா்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றமும் செய்து நிறைவு செய்துள்ளனா்.