புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

நடிகை சித்ராவின் கணவா் ஜாமீன் வழக்கு: போலீஸாா் பதிலளிக்க உத்தரவு

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரின் கணவா் ஜாமீன் கோரிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 3:30 pm IST


சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரின் கணவா் ஜாமீன் கோரிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீஸாா், சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக, அவரின் கணவா் ஹேம்நாத்தை கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி கைது செய்தனா். இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஹேம்நாத் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘கடந்த ஆகஸ்ட் மாதம் நானும் சித்ராவும், பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். என்னோடும், எனது குடும்பத்தினருடனும் சித்ரா அன்போடு பழகியதை, அவரின் தாய் விரும்பவில்லை. எனக்கும் சித்ராவுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. அவரின் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சித்ராவின் பெற்றோா் மனு தாக்கல் செய்ய இருப்பதாக அவா்களது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்தாா். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞா் பிரபாவதி, இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடா்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வரும் 18-ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.