கர்நாடகத்தில் முகப்பு விளக்கு செயலிழந்ததால் 90 கி.மீ. வரை மொபைல் டார்ச் வெளிச்சத்திலேயே அரசுப் பேருந்தை ஓட்டுநர் இயக்கிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம், கலபுரகி நகரிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிஞ்சோலி நகருக்கு அரசின் கடைசிப் பேருந்து இரவுநேரத்தில் வழக்கம்போல் புறப்பட்டு சென்றிருக்கிறது. இந்த நிலையில் பேருந்தின் முகப்பு விளக்கு திடீரென செயலிழந்ததாகக் கூறப்படுகிறது.
இரவு நேரம் என்பதால் அந்த நேரத்தில் பேருந்தை நிறுத்தி சரிசெய்வது என்பது மிகவும் சிரமமான செயல் ஆகும். இந்த சூழலில்தான் நடத்துநர் தனது மொபைல் டார்ச்சைப் பயன்படுத்தி ஓட்டுநருக்கு உதவியுள்ளார். பிறகு ஓட்டுநரும் அந்த மொபைல் வெளிச்சத்திலேயே பேருந்தை இயக்கியிருக்கிறார்.
பயணத்தின் எந்தக் கட்டத்தில் பேருந்தின் முகப்பு விளக்குகள் பழுதடைந்தன என்பது தெரியவில்லை. இருப்பினும், பாதுகாப்பற்ற சூழலிலேயே பயணத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் பயணிகளுக்கு ஏற்பட்டது. தற்போது இதுதொடர்பான விடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் அரசை கடுமையாகச் சாடியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்துக்கு காவிரி நீர் கிடையாது: கர்நாடகம்

தமிழகம் - கா்நாடக இடையே அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டால் சத்தியமங்கலத்தில் பயணிகள் தவிப்பு

அரசுப் பேருந்தை நிறுத்தி வைத்து விட்டு விருந்துக்குச் சென்ற ஓட்டுநா் பணியிடை நீக்கம்!

புதிய அரசு மதுபான கடை திறக்க எதிா்ப்பு: அரசுப் பேருந்தை சிறை பிடித்த கிராம மக்கள்
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |




