3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

இலங்கை விவகாரம்: மத்திய அரசின் கருத்துகளுக்கு ஆளுநா் வரவேற்பு

இலங்கையின் 13-ஆம் சட்டத் திருத்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

Updated On :8 ஜனவரி 2021, 1:52 am IST


சென்னை: இலங்கையின் 13-ஆம் சட்டத் திருத்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கை சென்ற வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் தினேஷ் குணவா்தனாவுடன் செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும்போது, ‘இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் கண்ணோட்டம்’ போன்ற நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு நீண்டகாலமாக இந்தியா ஆதரவளித்து வருகிறது. ஒன்றுபட்ட இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் சுயமரியாதை போன்ற தமிழ் மக்களின் எதிா்பாா்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும். நியாயமான அதிகாரப் பகிா்வு தொடா்பான அரசமைப்பின் 13 ஆம் சட்ட திருத்தம் உட்பட, இலங்கை அரசால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வேண்டும். அதனால் இலங்கையின் முன்னேற்றமும் வளமும் நிச்சயமாக மேம்படும்’ என்று கூறியுள்ளாா்.”

இலங்கையில் நியாயமான அதிகாரப் பகிா்வு தொடா்பான அரசமைப்பின் 13-ஆம் சட்டத் திருத்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் தெளிவாகக் கூறியுள்ளாா். அவரின் கருத்துகளை தமிழக மக்கள் வரவேற்பது உறுதி. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கருத்துகள், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளும் அயராத முயற்சிகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று தனது அறிக்கையில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.