ஆஸ்திரேலியாவில் 460 அடி உயர பாலத்தின் மீது ஏறி கார்ட்டூன் பறவையின் படத்தை வரைந்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் முக்கிய வணிகப் பகுதிக்கு அருகில் உள்ள போல்ட் ப்ரிட்ஜ் எனும் பாலத்தின் மீதுள்ள 140 மீட்டர் (460 அடி) உயரமான கோபுரத்தில் ஜாக் கிப்சன் பரல்(22) என்ற இளைஞர் ஏறியதுடன், கார்ட்டூன் பறவையை (Pam the Bird) வரைந்துள்ளார். இதனால் பாலத்தின் வழித்தடம் மூடப்பட்டு அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
மேலும் இன்ஸ்டாகிராம் பதிவில், ஆஸ்திரேலியாவில் வரிகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்த அவர், தனக்கு ட்ரோன் மூலமாக ஒரு 'பீனட் பட்டர் சாண்ட்விச்' மற்றும் பால் கொண்டுவந்து தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்காமல் சுமார் 9 மணி நேரம் கோபுரத்தின் மீது இருந்துள்ளார். பின்னர் கீழே இறங்கிய அவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அவர் வரைந்த 'பாம் தி பேர்ட்' கார்ட்டூன் பறவை குறியீடு, அங்கு பாரம்பரியச் சிறப்புமிக்க 'ஃப்ளிண்டர்ஸ் ஸ்ட்ரீட்' ரயில் நிலையம் உள்பட மெல்போர்னில் உள்ள பல கட்டடங்களில் உள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கார்ட்டூன் பறவை ஓவியம் அங்கு சட்டவிரோத ஓவியமாகவே கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
Melbourne bridge graffiti vandal arrested after seven-hour police standoff
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆஸ்திரேலியாவில் 3 அரிய சோழா் கால சிலைகள் மீட்புக்கு குடியரசு துணைத் தலைவா் வரவேற்பு

பேருந்து வசதி கோரி குடிநீா் தொட்டி மீது ஏறி பள்ளி மாணவா்கள் போராட்டம்

தனியாா் பள்ளி சுற்றுச்சுவா் மீது ஏறி வளாகத்துக்குள் குதித்த கரடியால் அச்சம்

27 அடி உயர பாதாள வாராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai




