ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

ஆலங்குளத்தில் காய்ச்சலுக்கு 9 மாத குழந்தை பலி 

ஆலங்குளத்தில் ஒரேநாள் காய்ச்சலில் 9 மாத குழந்தை உயிரிழந்தது. இப்பகுதியில் டெங்கு பரவுகிறதா என பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 4:01 pm IST

ஆலங்குளத்தில் ஒரேநாள் காய்ச்சலில் 9 மாத குழந்தை உயிரிழந்தது. இப்பகுதியில் டெங்கு பரவுகிறதா என பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஆலங்குளம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது 9 மாத ஆண் குழந்தை சர்வேஸ் வியாழக்கிழமை வயிற்றுப்போக்கால் அவதியடைந்தது. அதற்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு காய்ச்சல் வந்ததாம். மீண்டும் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் காவல்துறை வழக்குப் பதிந்து குழந்தையின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டெங்குவா? : இதனிடையே ஆலங்குளம் பகுதியில் கடந்த சில தினங்களாக டெங்கு தடுப்பு பரிசோதனைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் குழந்தையின் மரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, இது குறித்து எங்களுக்குத் தெரியாது எனப் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்தனர். தொடர்ந்து இப்பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.