சென்னை: தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான நிலத்தில் வணிக நோக்கில் கட்டடம் கட்ட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில்,சென்னையைச் சேர்ந்த சுந்தர் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரத்தில் சைவ சமய அறக்கட்டளையான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதின மடத்துக்கு சொந்தமாக திருக்கடையூரில் 14 ஆயிரம் சதுர அடியில் இருந்த திருமண மண்டபம், சிதிலமடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்த இடத்தின் குத்தகைதாரர், நிலத்தை காலி செய்து கொடுத்த பின், அங்கு மூன்று அடுக்கு கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த கட்டடம் அனுமதியின்றி கட்டப்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தருமபுரம் ஆதீன மடம், தற்போது அறப்பணிகளில் அக்கறை காட்டாமல் வருவாய் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. எனவே அனுமதியின்றி கட்டடம் கட்ட மடத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, மடம் என்பது அரசு அமைப்பு என்பதை மனுதாரர் நிரூபிக்கவில்லை எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதேநேரம், இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் வழக்கு தொடர, இந்த உத்தரவு தடையாக இருக்காது என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மார்க்சிய கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஆர். செல்லசுவாமி தேர்வு!

தவெகவுக்கு ஆதரவில்லை; அமமுகவின் எம்எல்ஏ புதுச்சேரி விடுதியில் உள்ளார்! - டிடிவி தினகரன் அறிவிப்பு!

24,200-க்குக் கீழ் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு; தகவல் தொழில்நுட்பப் பங்குகள் உயர்வு!!

தாவூத் கூட்டாளி சலீம் டோலாவிற்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

