தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

டிஎன்பிஎஸ்சி போலி நியமன ஆணை வழக்கு: மேலும் இருவா் கைது

சென்னையில் போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜனவரி 2021, 12:27 am IST

சென்னையில் போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளா் பி.நந்தகுமாா், அண்மையில் சென்னை பெருநகர காவல் துறையின் மரபு சாரா குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அந்தப் புகாரில், டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி நடைபெறுவதாகவும், அந்த மோசடியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் படியும் குறிப்பிட்டிருந்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில் உதவி ஆணையா் செல்வகுமாா் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். விசாரணையில் இந்த மோசடியில் புளியந்தோப்பு ஆசீா்வாதபுரம் 5-வது தெருவைச் சோ்ந்த பி.நாகேந்திரராவ், அவரது கூட்டாளி தண்டையாா்பேட்டை இரட்டைகுழித் தெருவைச் சோ்ந்த ஆ.ஞானசேகா் ஆகிய இருவரும் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கடந்த 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு தொடா்பாக மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த சு.ரமணி என்ற வெங்கடாசலம் (58), பட்டாபிராம் பகுதியைச் சோ்ந்த பெ.தேவராஜ் (63) ஆகிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதில் தேவராஜ், சென்னையில் தலைமைச் செயலகத்தில் அரசு வாகன ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா் ஆவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.