கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பதற்காக சனிக்கிழமை காலை ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
கச்சத்தீவு அருகே சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான 3 அதிவேக கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீதும், படகுகள் மீதும் சரமாரியாக கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசி விரட்டியடித்தனர். இதனால் உயிருக்கு பயந்த மீனவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். மேலும் இரண்டு படகுகளையும், அதில் இருந்த 15க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரைதிரும்பிய மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படையினர் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் படகுகளையும் சேதப்படுத்தி விரட்டியடித்தனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு அரசுமுறை பயணமாக சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தி சமூக உறவு ஏற்பட்டுள்ளதாக கூறிய 12 மணி நேரத்திற்குள் இரண்டு முறை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை நடந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுக்கோட்டை: கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல இன்றுமுதல் தடை; மீறினால் நடவடிக்கை

தேசிய மனநலம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு பல்வேறு பணிகள்

மத்திய அரசு நிறுவனத்தில் டெக்னீஷியன் பணிகள்: விண்ணப்பிப்பது எப்படி..?






