தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 2 நாள்களுக்கு தெற்கு தீபகற்ப பகுதியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாள்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாள்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரி கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூறையாடப்பட்ட திரிணமூல் அலுவலகம்! பாஜக தொண்டர்கள் அட்டூழியம்!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடவிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட்!

பிரதமர் மோடி, ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 10 பேர்! முதலிடத்தில் 1 வாக்கு!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


