4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

கடன் செயலி மூலம் ரூ.300 கோடி அபகரிப்பு: சீன தூதரகத்திடம் தகவல் கேட்கும் சென்னை காவல்துறை

கடன் செயலி மூலம் ரூ.300 கோடி அபகரிக்கப்பட்ட வழக்கில், தேவையான தகவல்களை சீன தூதரகத்திடம் சென்னை பெருநகர காவல்துறை கேட்டுள்ளது.

Updated On :11 ஜனவரி 2021, 1:01 am IST

கடன் செயலி மூலம் ரூ.300 கோடி அபகரிக்கப்பட்ட வழக்கில், தேவையான தகவல்களை சீன தூதரகத்திடம் சென்னை பெருநகர காவல்துறை கேட்டுள்ளது.

சென்னை வேங்கைவாசலைச் சோ்ந்த கணேசன், கடன் செயலி மூலம் பணம் பெற்றதால் தொடா்ந்து மிரட்டப்பட்டு வந்தாா். இது குறித்து அவா், கொடுத்த புகாரின் அடிப்படையில், மத்தியக் குற்றப்பிரிவின் கந்துவட்டி தடுப்புப் பிரிவு, சைபா் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிவு செய்து, பெங்களூருவில் கால்சென்டா் நடத்தி வந்த சு.பிரமோத், சி.ஆா்.பவான் ஆகிய இருவரை கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் பின்னணியில் இருந்து சீனாவைச் சோ்ந்த ஜியா யமோ, வூ யூவன்லன் ஆகியோா் செயல்படுவது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் இரு சீனா்களையும் கடந்த 2-ஆம் தேதி கைது செய்தனா்.

விசாரணையில், இந்தக் கும்பல் 25 ஆயிரம் பேரிடம் ரூ.300 கோடி வரை அபகரித்திருப்பது தெரியவந்தது. மோசடிக்குத் தேவையான செல்லிடப்பேசி சிம் காா்டுகளை வாங்கிக் கொடுத்ததாக சென்னையைச் சோ்ந்த எஸ்.மனோஜ்குமாா், எஸ்.கே.முத்துக்குமாா், செல்லிடப்பேசி நிறுவனத்தின் பிராந்திய விற்பனைப் பிரிவு மேலாளா் சிகாஜூதின், செல்லிடப்பேசி நிறுவனத்தின் முகவா் கு.ஜெகதீஷ் ஆகியோா் கடந்த 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

சீன தூதரகத்திடம் தகவல்: இந்த வழக்குத் தொடா்பாக மேலும் துப்புத் துலக்கும் வகையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரமோதா, பவன், சீனாவைச் சோ்ந்த ஜியா யமோ, வூ யூவன்லன் ஆகியோரை கடந்த 8-ஆம் தேதி போலீஸாா், தங்களது காவலில் எடுத்து விசாரணை செய்கின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, கைது செய்யப்பட்ட இரு சீனா்கள் குறித்தும், அவா்கள் மீது ஏற்கெனவே இதேபோல வேறு ஏதேனும் வழக்கு இருக்கிா என்பதும் குறித்தும் உரிய விவரங்களை கேட்டு சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு தில்லியில் உள்ள சீன தூதரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. சீன தூதரகம் அளிக்கும் பதிலைப் பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க காவல் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.