ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காங்கிரஸுடன் இணையும் சரத் பவார் கட்சி! இறுதிக்கட்ட பேச்சு தீவிரம்!

காங்கிரஸுடன் சரத் பவார் கட்சி இணையவுள்ளதாக வெளியாகும் தகவல் பற்றி...

Sharad Pawar, Rahul Gandhi

சரத் பவார், ராகுல் காந்தி (கோப்புப்படம்) - ANI

Published On :2 ஜூலை 2026, 12:25 pm IST

காங்கிரஸ் கட்சியுடன் சரத் பவாரின் கட்சியை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய பாதுகாப்புத் துறை, வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராகவும், மகாராஷ்டிரத்தின் முதல்வராகவும் பதவி வகித்தவர் சரத் பவார். இவர், கடந்த 1999 ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார்.

இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்ட நிலையில், சரத் பவாரின் மருமகனான அஜித் பவார் கட்சியைக் கைப்பற்றினார். அதன்பின்னர், தேசியவாத காங்கிரஸ் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றது.

தற்போது மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே சிவசேவனை கட்சியிலும் பிளவு ஏற்பட்டிருக்கும் சூழலில், காங்கிரஸுடன் தனது கட்சியை இணைக்கும் பேச்சுவார்த்தையை சரத் பவார் தீவிரப்படுத்தியுள்ளார்.

தில்லியில் உயர்நிலைத் தலைவர்கள் அளவில் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சரத் பவார் தரப்பு எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸுடன் இணைய இசைவு காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியில் தனது மகளான சுப்ரியா சுலேவுக்கு முக்கிய பதவி வழங்க வேண்டும் என்றும், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் பதவி தங்கள் தரப்புக்கு வழங்க வேண்டும் என்றும் சரத் பவார் காங்கிரஸ் தலைமையிடம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிர சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜய் வடெட்டிவார் கூறுகையில், “மதச்சார்பற்ற கொள்கையுடைய சரத் பவார், எங்கள் கட்சியில் இணைய வரவேற்கிறோம். தலைவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது” என்று என்டிடிவியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

Summary

Sharad Pawar's party to join Congress - Final-stage talks intensify

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.