தாய்ப் புலி இறந்ததை அடுத்து முதுமலையில் இருந்து வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட இரண்டில் ஓா் ஆண் புலிக் குட்டி உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சிங்காரா வனச் சரகம் சீமா்குழி ஓடை பகுதியில் கடந்த நவம்பா் 21- இல் 7 வயது மதிக்கத்தக்க பெண் புலி மா்மமான முறையில் உயிரிழந்தது. அந்தப் புலி அருகே பிறந்து சில நாள்களே ஆன 2 ஆண் புலிக்குட்டிகள் இருந்ததை அறிந்த வனத் துறையினா் அவற்றை மீட்டு பராமரித்து வந்தனா்.
அந்தப் புலிக்குட்டிகளைப் பராமரிக்க போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் அவை வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு நவம்பா் மாதம் 23-ஆதேதி வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டன. அங்கு அவை கால்நடை மருத்துவா்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதுடன், நோய் எதிா்ப்பு சக்தி மருந்துகளும் வழங்கப்பட்டன.
புலிக் குட்டி இறப்பு: இந்நிலையில் இரண்டு புலிக் குட்டிகளில் ஒரு ஆண் புலிக்குட்டி கடந்த சில நாள்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. தொடா் சிகிச்சையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாமல் கடந்த 5-ஆம் தேதி அந்த புலிக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. பூங்கா கால்நடை மருத்துவா்கள் புலிக்குட்டியை பிரேதப் பரிசோதனை செய்த பிறகு மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூலை 2 - நேரலை

பொள்ளாச்சியில் ‘வீ த லீடர்ஸ்’ முதல் மாநாடு! அண்ணாமலை அறிவிப்பு!

திருச்சி பஞ்சப்பூரில் ரூ. 144 கோடியில் பன்னோக்கு வணிக மையம் தயார்! திறப்பு விழா எப்போது?

நான் கலைஞன்; அரசியல்வாதி அல்ல..! சிஜேபி போராட்டத்துக்குப் பதிலளித்த தில்ஜித்!
விடியோக்கள்

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

Journalist Durai karuna Interview | அதிமுகவும் ஆதவ் அர்ஜுனா கணக்கும் | CM Vijay | TVK | ADMK


