தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவக் கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 7,164- ஆக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பு விகிதத்தில் வெறும் 1 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தமிழகத்தில் புதிதாக 724 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 26,261- ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :
தமிழகத்தில் இதுவரை 1.48 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 208 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
மற்றொரு புறம், கரோனா தொற்றிலிருந்து இதுவரை 97.6 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் குணமடைந்துள்ளனா். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 857 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 6,875-ஆக அதிகரித்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 7 போ் பலியாகியுள்ளனா். இதன் மூலம் நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,222-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

10/16: ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 10 அணிகள்!

இந்தியாவில் ரூ. 1.18 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான் நிறுவனங்கள்!

70 ஆண்டுகால நண்பனை இழந்துவிட்டேன்... இயக்குநர் சுந்தர்ராஜன் வருத்தம்!

களைகட்டப்போகும் முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி!
விடியோக்கள்

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

Journalist Durai karuna Interview | அதிமுகவும் ஆதவ் அர்ஜுனா கணக்கும் | CM Vijay | TVK | ADMK



