இயக்குநர் பாக்யராஜின் மறைவுக்கு அவரது சிறுவயது நண்பரான இயக்குநர் சுந்தர்ராஜன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பயணங்கள் முடிவதில்லை, அம்மன் கோவில் கிழக்காலே, திருமதி பழனிச்சாமி, என் ஆசை மச்சான் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சுந்தர்ராஜன்.
நடிகராகவும் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் இன்றும் நல்ல படங்களைக் கொடுத்த இயக்குநர் என்கிற பெயருடனே இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் நேர்காணலில் பேசிய சுந்தர்ராஜன், இயக்குநர் பாக்யராஜ் எனக்கு நெருங்கிய நண்பனாக இருந்தாலும் இயக்குநரானதும் தொழில் ரீதியான துரோகம் செய்தார் எனக் கூறி அதிர்ச்சியளித்தார்.
ஆனால், இயக்குநர் பாக்யராஜ் மறைந்ததும், "பாக்யராஜின் இழப்பு மிகவும் வேதனையைக் கொடுத்தது. உங்களுக்குள் 70 ஆண்டுகாலம் பழக்கம் இருந்தது. ஒரே பள்ளியில் படித்து, சென்னை வந்தவர்கள். பள்ளி காலத்திலேயே நான் நாடகம் எழுதி, பாக்யராஜை நடிக்கச் சொன்னேன். அப்போது அவருக்கு நடிப்பில் பெரிய ஈடுபாடு இல்லை. அப்போதே நடிக்கனாக்கியது நான்தான்.
பாக்யராஜ் எனக்கு செய்த துரோகங்களைக் கூறியிருந்தேன். அது அனைத்தும் மனிதனுக்குள் இருக்கும் இயல்பான விஷயம்தான். நானும் அவரும் இணைந்து ஒரு நேர்காணல் அளிக்க முடிவு செய்திருந்தோம். பாக்யராஜ் உயிருடன் இருந்திருந்தால் இருவரும் சேர்ந்துபேசியிருப்போம். மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
Director Sundararajan has expressed his sorrow over the passing of his childhood friend, Director Bhagyaraj.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாக்யராஜ் உடல் தகனத்திற்கு முன் பூர்ணிமா சொன்ன விஷயம்... கண்கலங்கிய பார்த்திபன்!

விடை பெற்றார், அன்புடன் பாக்யராஜ்!

இயக்குநர் கே. பாக்யராஜ் உடல் தகனம்!
இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவுக்கு தமிழக ஆளுநர் இரங்கல்!
விடியோக்கள்

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

Journalist Durai karuna Interview | அதிமுகவும் ஆதவ் அர்ஜுனா கணக்கும் | CM Vijay | TVK | ADMK




