தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

இயக்குநர் கே. பாக்யராஜ் உடல் தகனம்!

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ் உடல் தகனம் செய்யப்பட்டது.

News image

இயக்குநர் கே. பாக்யராஜ் உடல் தகனம்! - படம்: விடியோ கிளிப்

Updated On :28 ஜூன் 2026, 11:23 am IST

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று(ஜூன் 28) தகனம் செய்யப்பட்டது.

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

தனது தனித்துவ திரைக்கதைகளால் ரசிகர்களைக் கவர்ந்த பாக்யராஜ், 1980 காலகட்டங்களில் தலை சிறந்த திரைக்கதை மன்னன் எனப் போற்றப்பட்டவர்.

பாரதிராஜாவிடம் உதவியாளராகத் தொடங்கி, சுவரில்லாத சித்திரங்கள் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் 25-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், நடுத்தர வர்க்க வாழ்க்கையை நகைச்சுவை, குடும்ப உணர்வுகளுடன் திரையில் கொண்டுவந்தார்.

பாக்யராஜின் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்த்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் ஜோசப் விஜய் நேரில் சென்று பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி., நடிகர்கள் ரஜினிகாந்த், கவுண்டமணி, விஜயகுமார், சரத்குமார், சிவகாா்திக்கேயன், நடிகைகள் ராதிகா, சுஹாசினி, இயக்குநர்கள் பி. வாசு, சமுத்திரக்கனி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் என். ஆனந்த், ராஜ்மோகன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பாக்யராஜின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Summary

Bhagyaraj's body was cremated at the Besant Nagar electric crematorium in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.