ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ஆமீர் கான் முதல் ஜாக்கி ஷெராஃப் வரை... ஹிந்தியில் ரீமேக் செய்ய ஆசைப்பட்ட பாக்யராஜ் படம்!

பாக்யராஜ் படத்திற்கு போட்டியிட்ட பாலிவுட் பிரபலங்கள்...

News image
Updated On :27 ஜூன் 2026, 8:08 pm IST

இயக்குநர் பாக்யராஜின் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பாலிவுட் பிரபலங்கள் பலர் போட்டியிட்டனர்.

இயக்குநர் பாக்யராஜ் தான் எழுதிய ஒரு கைதியின் டைரி திரைப்படத்தை ஹிந்தியில் நடிகர் அமிதாப் பச்சனை வைத்து, ஆக்ரி ராஸ்தா (aakhree raasta) என்கிற பெயரில் ரீமேக் செய்து வெற்றியைப் பெற்றார்.

தொடர்ந்து, ஹிந்தியில் தன் திரைப்படங்களான வீட்ல விஷேங்க படத்தை மிஸ்டர் பெச்சாரா (நடிகர்கள் அனில் கபூர், ஸ்ரீதேவி, நாகர்ஜூனா) வேட்டிய மடிச்சு கட்டு படத்தை பப்பா தி கிரேட் (நடிகர்கள் கிருஷ்ணகுமார், நக்மா) என்கிற பெயர்களில் பாக்யராஜ் ரீமேக் செய்தார்.

இதில், வேட்டியை மடிச்சு கட்டு திரைப்படம் கதை ரீதியாக நல்ல படமென்றாலும் தமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இது ஏன் என தனக்கும் தெரியவில்லையென பாக்யராஜ் கூறியிருந்தார். ஆச்சரியமாக இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை நடிகர்கள் ஆமிர் கான், ஜாக்கி ஷெராப் தயாரிப்பாளர் போனி கபூர் உள்பட பலர் பாக்யராஜிடம் கேட்டிருக்கின்றனர்.

ஆனால், நடிகர்கள் கிருஷ்ண குமார், நக்மா ஆகியோரை வைத்து ஹிந்தியில் பப்பா தி கிரேட் (pappa the great) என்கிற பெயரில் இப்படத்தைப் பாக்யராஜ் ரீமேக் செய்தார். அங்கு ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Many Bollywood celebrities competed to acquire the remake rights of Director Bhagyaraj's film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.