என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: ஸ்ரீவாணி, விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நாளை ரத்துஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதிதில்லி பிரதிநிதி நியமனம்: முதல்வருக்கு அதிகாரம் உள்ளது - திருமாவளவன்திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க இன்று காலை வரையில் முயற்சி: நிர்மல் குமார்
/

விடை பெற்றார், அன்புடன் பாக்யராஜ்!

பாக்யராஜ் உடல் தகனம் செய்யப்பட்டது...

News image

இயக்குநர் பாக்யராஜ்

Updated On :28 ஜூன் 2026, 1:12 pm IST

மறைந்த இயக்குநர் பாக்யராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இயக்குநர், நடிகர் என இந்தியளவில் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு காரணமாக நேற்று (ஜூன் 27) திடீரென உயிரிழந்தது அவரது ரசிகர்களிடம் சோகத்தையும் வேதனையையும் அளித்துள்ளது.

தொடர்ந்து, பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்து நூற்றுக்கணக்கான திரைப் பிரபலங்கள் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு வந்தனர். முக்கியமாக, தமிழக முதல்வர் விஜய், நடிகர்கள் ரஜினிகாந்த், மம்மூட்டி உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் சினிமாவில் சுவரில்லாத சித்திரங்கள் மூலம் இயக்குநரானவர் 28 திரைப்படங்களை இயக்கினார். இதில், சில திரைப்படங்கள் மற்ற மொழிகளில் இவராலேயே ரீமேக்கும் செய்யப்பட்டன. அதில், நடிகர் அமிதாப் பச்சனை வைத்து ஒரு கைதியின் டைரி (ஆக்ரி ராஸ்தா) என்கிற ஹிந்தி படத்தை இயக்கி அங்கும் வெற்றியைப் பெற்றார்.

இன்று அரசு மரியாதையுடன் பெசண்ட் நகர் கடற்கரைப் பகுதியில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அன்புடன் உங்கள் கே. பாக்யராஜ் இனிமேல் சினிமாவில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார் என ரசிகர்கள் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

The mortal remains of the late director Bhagyaraj were cremated with state honors.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.