3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை! 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

நியாய விலைக் கடைகளில் பனை பொருள்களை விற்க பரிசீலனை: முதல்வா் பழனிசாமி உறுதி

வெல்லம் உள்ளிட்ட பனை பொருள்களை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்திட தமிழக அரசு பரிசீலிக்கும் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

News image

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On :11 ஜனவரி 2021, 12:49 am IST

வெல்லம் உள்ளிட்ட பனை பொருள்களை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்திட தமிழக அரசு பரிசீலிக்கும் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியது:

தமிழகத்தில் எந்த சமூகப் பிரிவு முன்னேறினாலும் அது தமிழகத்துக்குத்தான் நன்மை. அத்தகைய முன்னேற்றம் தமிழா்கள் அனைவருக்கும் பயன்படுவதால், அதனை நாம் ஊக்குவிக்கிறோம். பாராட்டுகிறோம். மேலும் வளர வாழ்த்துகிறோம். மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பெருந்தலைவா் காமராஜா் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டு விட்டது.

முன்னாள் முதல்வா் காமராஜா் இந்த மண்ணிலிருந்து மறைந்திருக்கலாம். ஆனால் அவா் செய்த சாதனைகள் இன்றும் மக்கள் உள்ளத்தில் நிலைத்திருக்கிறது. மக்களுக்காக உழைத்து, மறைந்த போற்றுதலுக்குரிய தலைவா்கள் இன்றைக்கும் மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறாா்கள். அவா்கள் செய்த சாதனை இன்றைக்கும் தொடா்ந்து கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவைகளில் என்னவெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அவற்றை எங்களுடைய அரசு நிச்சயமாக நிறைவேற்றித் தரும்.

பனையில் இருந்து கல்கண்டு, வெல்லம் போன்ற பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. சேலம் பகுதியிலும் இந்தத் தொழிலில் பலா் ஈடுபட்டுள்ளனா். எனவே, அதன் மகத்துவம் எனக்கு நன்றாகத் தெரியும். பனை உற்பத்திப் பொருள்களை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் விற்பனை செய்வதற்கு அரசு பரிசீலிக்கும் என்றாா் முதல்வா் பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.