தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே ராயப்பன்பட்டி சண்முகா நதி அணை நீர்த்தேக்கம் 2ஆம் முறையாக நிரம்பி மறுகால் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராயப்பன்பட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சண்முகா நதி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. 52.50 அடி உயரம் கொண்ட இந்த நீர்த்தேக்கத்திற்கு ஹைவேஸ் -மேகமலை, பெருமாள் மலை ,சுருளி மலை பகுதிகளில் பெய்யும் மழை நீரே முக்கிய நீர்வரத்து ஆகும்.
கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக அணையின் முழு கொள்ளளவு எட்டியதால் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 44 அடியாகக் குறைந்தது. இதற்கிடையே கடந்த சில நாள்களாக ஹைவேஸ்-மேகமலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சண்முகாநதி அணை நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து ஏற்பட்டது. இ
தனையடுத்து சண்முகா நதி அணை நீர்த்தேக்கம் 2ஆம் முறையாக நிரம்பி மறுகால் பாய்கிறது. தற்போது 700 கனஅடி நீர் வரத்தால் ஒரே நாளில் 6 அடி நீர்மட்டம் உயர்ந்தது. தற்போது உபரி நீராக மறுகால் செல்லும் மழைநீர் முல்லைப்பெரியாறு நோக்கிப் பாய்ந்து செல்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வெங்கட நாராயணா நியமனம்: அதிமுக கண்டனம்

நடப்பு நிதியாண்டில் வணிக வாகனத் துறை மிதமான வளர்ச்சியை எட்டும்: ஐசிஆர்ஏ
ரவி மோகனின் கராத்தே பாபு வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
இன்றைய செய்திகள் ஜூன் 26 - நேரலை
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan



