அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

சொந்த ஊரில் குடும்பத்தாருடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர்

உழவர் திருநளையொட்டி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி , வியாழக்கிழமை தனது சொந்த ஊரான எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடினார்.

News image

சொந்த கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடிய தமிழக முதல்வர்

Updated On :14 ஜனவரி 2021, 1:52 pm IST


உழவர் திருநளையொட்டி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி , வியாழக்கிழமை தனது சொந்த ஊரான எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடினார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம், கமாலாபுரம் சென்ற அவர் அங்கிருந்து சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்கு வருகை புரிந்தார்.

அவரது வீட்டின் அருகே உள்ள முருகன் கோயில் திடலில் நடைபெறும் பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.

Story image

இதனை அடுத்து தனது பண்ணைத் தோட்டத்துக்கு சென்று அங்கு உள்ள தொழிலாளா்களுடன் பொங்கல் விழாவை முதல்வர் கொண்டாடினார். 

பொங்கல் பண்டிகையை ஒட்டி சிலுவம்பாளையம் பகுதியில் நடைபெறும் கிராமிய கலைநிகழ்ச்சிகளை கண்டு மக்களை சந்தித்து உரையாடவும் முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.