கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் பலத்த மழை காரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்தது.
முல்லைப் பெரியாறு அணையில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது, இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 122.25 அடியாகவும், அணைக்கு நீர் இருப்பு 3,074 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,315 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 700 கனஅடியாகவும் இருந்தது.
அன்று நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 126.40 அடி உயரமாகவும், அணைக்குள் நீர் இருப்பு 3,920 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 10 ஆயிரத்து 707 கன அடியாகவும் இருந்தது.
ஒரே நாளில் முல்லைப் பெரியாறு அணைக்குள் நீர் வரத்து அதிகம் காரணமாக அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 8000 கன அடி தண்ணீர் வினாடிக்கு அணைக்குள் வரத்து வந்துள்ளது.
கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தற்போது நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், கம்பம் பள்ளத்தாக்கு உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீன்பிடி படகுகளுக்கு மராமத்து நிவாரண நிதி வழங்க கோரிக்கை

மீன்பிடி தடைகாலம்: விசைப் படகுகள் மராமத்து பணி தீவிரம்
பெங்களூரில் கேரள மாணவா்கள் மீது தாக்குதல்: கோவையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 6 போ் கைது

காலமானாா் என்.எம். கிருஷ்ணமூா்த்தி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


