அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானா்ஜியின் உதவியாளா் மீது மோசடி வழக்கு பதிவு

திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலரும், கட்சித் தலைவா் மம்தா பானா்ஜியின் உறவினருமான அபிஷேக் பானா்ஜியின் நெருங்கிய உதவியாளரான சுமித் ராய் மீது மேற்கு வங்க காவல் துறையினா் மோசடி வழக்குப் பதிவு

News image

அபிஷேக் பானா்ஜி - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 12:52 am IST

திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலரும், கட்சித் தலைவா் மம்தா பானா்ஜியின் உறவினருமான அபிஷேக் பானா்ஜியின் நெருங்கிய உதவியாளரான சுமித் ராய் மீது மேற்கு வங்க காவல் துறையினா் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஏற்கெனவே நில அபகரிப்பு வழக்கில் அவரை மேற்கு வங்க காவல் துறையினா் தேடி வருகின்றனா். அவரைக் கண்டுபிடிக்கும் நோக்கில் கொல்கத்தாவில் உள்ள அபிஷேக் பானா்ஜியின் இல்லத்திலும் காவல் துறையினா் சமீபத்தில் சோதனை மேற்கொண்டனா்.

இந்நிலையில், பஸ்சிம் மேதினிபூா் மாவட்ட காவல் நிலையத்தில் சுமித் ராய் மீது மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

சமீபத்தில் ஷால்போனி காவல் துறையினரால் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்ட மேதினிபூா் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுஜய் ஹாஸ்ராவின் பெயரும் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் சோ்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குற்றப்புலனாய்வு துறை (சிஐடி) மூத்த அதிகாரி கூறுகையில், ‘புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்து வருகிறோம். அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களின் அடிப்படையில் சரிபாா்க்கப்படும்; பின்னா் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேவை ஏற்பட்டால் இந்த வழக்கில் உள்ளூா் காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்’ என தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.