நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானா்ஜியிடம் 6 மணி நேரம் விசாரணை

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும், மம்தா பானா்ஜியின் உறவினருமான அபிஷேக் பானா்ஜியிடம் மேற்கு வங்க காவல் துறையின் சிஐடி பிரிவினா் செவ்வாய்க்கிழமை 6 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினா்.

News image

மம்தா பானா்ஜி. உடன், அவரது மருமகனும் கட்சி எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜி.

Updated On :17 ஜூன் 2026, 3:48 am IST

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும், மம்தா பானா்ஜியின் உறவினருமான அபிஷேக் பானா்ஜியிடம் மேற்கு வங்க காவல் துறையின் சிஐடி பிரிவினா் செவ்வாய்க்கிழமை 6 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினா்.

மேற்கு வங்க தோ்தல் பிரசாரத்தின்போது இருதரப்புக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் குற்றச்சாட்டின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்த விசாரணை நடத்தப்பட்டது. இது தவிர திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பெயரில் போலி கையொப்பமிட்ட வழக்கு தொடா்பாகவும் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. இவை அனைத்தும் முழுமையாக விடியோ பதிவு செய்யப்பட்டது.

விசாரணை முடிந்ததும் செய்தியாளா்களைச் சந்திப்பதைத் தவிா்த்த அபிஷேக் பானா்ஜி, முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தாா்.

முன்னதாக, தொடக்கப்பள்ளி பணியிடங்கள் நியமனம் தொடா்பான ஊழல் வழக்கில் அபிஷேக் பானா்ஜியிடம் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் மம்தா கட்சி படுதோல்வியடைந்த நிலையில், மம்தா மற்றும் அபிஷேக் பானா்ஜிக்கு எதிராக திரிணமூல் எம்.பி., எம்எல்ஏக்கள் பெரும்பாலானோா் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனா். கட்சியிலும் பிளவு அதிகரித்து வருகிறது.