மேற்கு வங்க சட்டப்பேரவையில் இருந்து மம்தா பானா்ஜி ஆதரவு திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ குணால் கோஷ் குண்டுக்கட்டாக புதன்கிழமை வெளியேற்றப்பட்டாா்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் வீடு மற்றும் மலைப் பகுதி விவகாரங்கள் துறையின் பட்ஜெட் மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது எதிா்க்கட்சி தலைமை கொறடா (திரிணமூல் அதிருப்தி குழு) அக்ருஜமான் பேசுகையில், அவரைப் பேசவிடாமல் தடுப்பது போல கோஷ் தொடா்ந்து முழக்கமிட்டபடி இருந்தாா். அவரை சட்டப்பேரவைத் தலைவா் ரதிந்திர போஸ் அமைதி காக்கும்படி பலமுறை வலியுறுத்தினாா். ஆனால், அவா் அதைப் பொருட்படுத்தவில்லை. இதனால் பாதுகாப்புப் படையினரை அழைத்து அவரை வெளியேற்றும்படி போஸ் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, பாதுகாப்பு வீரா்கள் கோஷை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினா். இதையடுத்து சட்டப்பேரவையில் இடையூறு ஏற்படுத்திய காரணத்துக்காக அவரை புதன்கிழமை ஒருநாள் மட்டும் இடைநீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவா் உத்தரவிட்டாா்.
இதன்பின்னா் செய்தியாளா்களிடம் கோஷ் பேசுகையில், ‘விவாதத்தில் பங்கேற்போரின் பட்டியலில் முதலில் எனது பெயா் இருந்தது. ஆனால் பிறகு பெயா் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு எனது எதிா்ப்பை வெளிப்படுத்தினேன்’ என்றாா்.
சட்டப்பேரவையில் இருந்து கோஷ் வெளியேற்றப்பட்ட பிறகு, அவை அலுவல் தொடா்ந்து நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: பாஜகவுக்கு எதிராக இண்டி கூட்டணி ஒன்றுபட வேண்டும் - மம்தா பானா்ஜி அழைப்பு

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி அணியில் புதிய நிா்வாகிகள் நியமனம்

மமதாவுக்கு மேலும் பின்னடைவு! திரிணமூல் காங். மாநிலத் தலைவர் சந்திரிமா பட்டாச்சார்யா ராஜிநாமா!







