தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜி

தில்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்கத் தயாராக உள்ளதாக மமதா பானர்ஜி தெரிவித்துள்ளது பற்றி...

News image

மமதா பானர்ஜி. - கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 9:32 pm IST

தில்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் சிஜேபியினரின் போராட்டத்தில் பங்கேற்கத் தயாராக உள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கடந்த ஜூன் 20 ஆம் தேதி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தொடங்கிய போராட்டம் நேற்று முதல் தீவிரமடைந்துள்ளது.

போராட்ட களமான ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் நேற்று தடியடி நடத்தினர்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காவல்துறையினர் உள்பட மாணவர்கள் பலரும் காயமடைந்தனர். இந்த நிலையிலும் இளைஞர்கள் தங்களுடைய போரட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்க்ள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இதுகுறித்து மமதா பானர்ஜி பேசியதாவது:

தேவைப்பட்டால் நான் தில்லிக்குச்சென்று சிஜேபியினரின் போராட்டத்தில் பங்கேற்பேன். நேற்று தில்லியில் என்ன நிகழ்ந்தது என்று பார்த்தீர்கள். மாணவர்களுக்கு எதிராக கொடுமை நடந்தது. நாடாளுமன்றத்திலிருந்து பிரதமர் வேறு திசையில் சென்றுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். பாஜகவின் அட்டூழியங்களை மக்கள் உணர வேண்டும். இது ஹிட்லர் மற்றும் ஸ்டாலின் போன்றோர் செய்த அட்டூழியங்களை ஏற்கெனவே கடந்துவிட்டது. சிஜேபி ஜனநாயகத்தைக் காக்கும் இயக்கமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Summary

Trinamool Congress leader Mamata Banerjee has stated that she is ready to participate in the protest being held at Jantar Mantar in Delhi.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.