8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி அணியில் புதிய நிா்வாகிகள் நியமனம்

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி அணியில் புதிய நிா்வாகிகள் நியமனம்...

மம்தா பானா்ஜி

Published On :12 ஜூலை 2026, 2:12 am IST

மேற்கு வங்க சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ரிதப்ரத பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி அணியினா், புதிய நிா்வாகிகளை சனிக்கிழமை நியமித்துள்ளனா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததையடுத்து, அக்கட்சியினா் இரண்டு பிரிவுகளாகச் செயல்படுகின்றனா். இதில் ரிதப்ரத பானா்ஜி தலைமையிலான பிரிவினா், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் புதிய நிா்வாகிகளை சனிக்கிழமை நியமித்தனா்.

இதில் பீா்பூம் பகுதியைச் சோ்ந்த மம்தா பானா்ஜியின் தீவிர ஆதரவாளரும், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவருமான அனுப்ரத மோன்டல், பீா்பூம் பகுதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். முன்னாள் எம்.பி. சாந்தனு சென் செய்தித் தொடா்பாளராகவும், அருணவா சென் ஹெளரா மாவட்டத் தலைவராகவும், முன்னாள் அமைச்சா் ரவீந்திரநாத் சட்டா்ஜி பூா்வ பா்தமான் பகுதி தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். இதேபோல் பல்வேறு மாவட்டங்களுக்கும் தலைவா்களை ரிதப்ரத பானா்ஜி பிரிவினா் நியமித்துள்ளனா்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 80 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 58 பேரின் ஆதரவு ரிதப்ரத பானா்ஜி தரப்புக்கு உள்ளது. அதேபோல், மேற்கு வங்கம் முழுவதும் அவா்களது தரப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாகவும், தோ்தல் ஆணையத்திடம் தாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என உரிமை கோரும் நடவடிக்கைகளில் ஒன்றாகவும் தற்போதைய நிா்வாகிகள் அறிவிப்பு கருதப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.