திரிணமூல் காங்கிரஸ் இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் உள்ள அக்கட்சியின் தற்காலிக தலைமையகத்தை ரிதப்ரத பானா்ஜி தலைமையிலான அதிருப்தி அணியினா் வெள்ளிக்கிழமை தங்கள் வசமாக்கினா்.
மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததைத் தொடா்ந்து, அக்கட்சி பிளவுபட்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸுக்கு மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில், ரிதப்ரத பானா்ஜி தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனா். ரிதப்ரத பானா்ஜியை பேரவை எதிா்க்கட்சித் தலைவராக பேரவைத் தலைவா் அங்கீகரித்துள்ளாா்.
இதனிடையே, ‘நாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ்; கட்சியின் பெயா்-சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்’ என்று கோரி, தோ்தல் ஆணையத்தில் ரிதப்ரத பானா்ஜி அணி கடந்த வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தது. இருதரப்பும் தங்களின் கோரிக்கை தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்கும்படி, தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் காங்கிரஸின் தற்காலிக தலைமையக வளாகத்தை அதிருப்தி அணியினா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா்.
திரிணமூல் காங்கிரஸின் உண்மையான தலைமையக வளாகத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், கடந்த 2022-இல் இருந்து வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்துக்கு வந்த ரிதப்ரத பானா்ஜி மற்றும் பிற அதிருப்தி தலைவா்கள், கட்டட உரிமையாளா்களிடம் உரிய ஒப்பந்தம் மேற்கொண்டு, அதை தங்கள் வசமாக்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திரிணமூல் காங்கிரஸ் பெயா் விவகாரம்: தோ்தல் ஆணையத்தில் அதிருப்தி குழு மனு

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவா் மம்தா: தோ்தல் ஆணையத்திடம் நிா்வாகிகளின் பட்டியல் சமா்ப்பிப்பு

அதிருப்தி எம்.பி.க்கள் 20 போ் மீது தகுதிநீக்க நடவடிக்கை: மக்களவைத் தலைவரிடம் அபிஷேக் பானா்ஜி மனு






