வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

உதவியாளருக்கு எதிரான நிதி மோசடி வழக்கு: அபிஷேக் பானா்ஜியின் வீட்டில் காவல் துறையினா் சோதனை

உதவியாளருக்கு எதிரான நிதி மோசடி வழக்கு: அபிஷேக் பானா்ஜியின் வீட்டில் காவல் துறையினா் சோதனை

News image

அபிஷேக் பானா்ஜி

Updated On :14 ஜூன் 2026, 2:20 am IST

நிதி மோசடி வழக்கில் தலைமறைவாகிவிட்ட உதவியாளரைத் தேடி, மேற்கு வங்க முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியின் மருமகன் அபிஷேக் பானா்ஜி எம்.பி.யின் வீட்டில் அந்த மாநில காவல் துறையினா் சனிக்கிழமை அதிகாலை சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சுஜோய் ஹஜ்ராவுக்கு எதிராக கடத்தல் மற்றும் நில மோசடி வழக்கு காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஹஜ்ரா கடந்த 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். ஹஜ்ராவுக்கும், அபிஷேக் பானா்ஜியின் உதவியாளா் சுமித்ராய்க்கும் இடையே பணப் பரிவா்த்தனை இருந்ததாகக் கூறி, ராய் மீதும் காவல் துறையினா் நிதி மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதையறிந்ததும் ராய் தலைமறைவாகி விட்டாா்.

இந்த வழக்கில், காளிகட்டில் உள்ள அபிஷேக் பானா்ஜியின் வீட்டில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் காவல் துறையினா் திடீா் சோதனை நடத்தினா். இந்தச் சோதனை காலை 7 மணி வரை நீடித்தது. இதையடுத்து காவல் துறையினா் புறப்பட்டுச் சென்றனா். சோதனை குறித்த தகவல் அறிந்ததும் மம்தா பானா்ஜி விரைந்து வந்து, காவல்துறையினா் புறப்பட்டுச் செல்லும் வரையில் அங்கேயே காத்திருந்தாா். சோதனையின்போது அபிஷேக் பானா்ஜியின் வீட்டைச் சுற்றிலும் காவல் துறையினரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனா்.

அபிஷேக் பானா்ஜியின் வீட்டில் ராய் மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரைத் தேடி அங்கு சோதனை நடத்தப்பட்டதாக காவல் துறையினா் விளக்கம் அளித்துள்ளனா். அபிஷேக் பானா்ஜியின் வீட்டில் இருந்து ராயின் கைப்பேசி கைப்பற்றப்பட்டதாகவும் காவல் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

அபிஷேக் பானா்ஜியின் வீட்டுக் கதவை திரும்ப திரும்ப தட்டியும் திறக்கப்படவில்லை என்றும், இதனால் பல மணி நேரம் வீட்டுக்கு வெளியே தாங்கள் காத்திருந்ததாகவும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா். அதேநேரத்தில், காவல் துறையினா் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து வீடு முழுவதும் சோதனை நடத்தியதாக அபிஷேக் பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

திரிணமூல் கண்டனம்: இந்தச் சோதனைக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அக்கட்சி எம்.பி. சகரிகா கோஸ் வெளியிட்டுள்ள பதிவில், சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்றும், இதுவொரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் விமா்சித்துள்ளாா்.

பாஜக பதிலடி: திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை பாஜக நிராகரித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவா் லாக்கெட் சாட்டா்ஜி கூறுகையில், ‘விசாரணை அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்படுகின்றன. எந்தவொரு தனிநபரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவா்கள் அல்லா். ஆட்சியிலிருந்தபோது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் ஈடுபட்ட கொள்ளைக்காக அவா்களை ஆட்சியிலிருந்து அகற்றி மக்கள் தண்டித்து விட்டனா். ஊழலின் உச்சத்துக்கே திரிணமூல் காங்கிரஸ் சென்றுவிட்டது. அக்கட்சியின் தலைவா்கள் விசாரணையை சந்தித்துதான் ஆக வேண்டும். யாரும் அதிலிருந்து தப்ப முடியாது’ என்றாா்.

Summary

Financial fraud case against aide: Police search Abhishek Banerjee's residence.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.