திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே இடத்தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்து ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன்(53). இவர் குடும்பத்துக்கும் பக்கத்து வீட்டில் உள்ள பாலகிருஷ்ணன்(50) குடும்பத்துக்கும் இடத்தகறாறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக வியாழக்கிழமை இரு வீட்டாருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டதாம். இதில், மாரியப்பன் மற்றும் அவரின் மகன் கிருஷ்ண சுந்தர் (21), பாலகிருஷ்ணன மற்றும் அவரது மகன் சேதுராமலிங்கம் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு கிருஷ்ண சுந்தர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து தாழையூத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இடத்தகராறு காரணமாக பொங்கல் தினத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதவாத அரசியல் எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழக மக்கள் கண்டுகொள்ள மாட்டாா்கள்: திருமாவளவன்

திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல்

அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர உத்தரவு!

”தேசிய கீதத்தை 2 முறை பாடுவதுமரபு மீறல் அல்ல!” சு. வெங்கடேசன் எம்.பி
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




