சங்ககிரி: பாதுகாப்பு எல்லைக் கோடுகள் தரையில் எழுதும் பணிகள் தொடக்கம் 

சங்ககிரியில் வாக்குச்சாவடி செல்லும் வழியில் பாதுகாப்பு எல்லைக் கோடுகள் தரையில் எழுதும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. 
பாதுகாப்பு எல்லைக் கோடுகள் தரையில் எழுதும் பணிகள் தொடக்கம் 
பாதுகாப்பு எல்லைக் கோடுகள் தரையில் எழுதும் பணிகள் தொடக்கம் 

சங்ககிரியில் வாக்குச்சாவடி செல்லும் வழியில் பாதுகாப்பு எல்லைக் கோடுகள் தரையில் எழுதும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. 

தமிழகத்தில் பொதுத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்குவதையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பது மற்றும் கட்சி பந்தல் அமைப்பது குறித்து 100 மீட்டர், 200 மீட்டர் அளவீடு செய்து தரையில் வெள்ளை வர்ணம் பூசும் பணிகள் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது. 

சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 389 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளது.  வாக்குப்பதிவின் போது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு வாக்குச்சாவடிமைங்களில் வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பது மற்றும் கட்சி பந்தல் அமைக்க வேண்டிய இடைவெளிகளை கட்சியினர், சுயேட்சை வேட்பாளர் எளிதில் அறிந்துகொள்வதற்காக 100 மீட்டர், 200 மீட்டர்களை அளவீடு செய்து தரையில் வெள்ளை வர்ணம் பூசும் பணிகளைசங்ககிரி வருவாய்த்துறையின்  சார்பில்  கிராம நிர்வாக அலுவலர்கள், சாலைப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com