புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தொட்டியம் கோவில் திருவிழாவில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை

தொட்டியம் கோவில் திருவிழாவில் ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஏப்ரல் 2021, 5:26 am

DIN

Youth stabbed to death

திருச்சி: தொட்டியம் கோவில் திருவிழாவில் ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியம் வட்டம் தொட்டியம் கிராமத்தில் நடைபெற்ற அருள்மிகு மதுரகாளியம்மன் கோவில் திருவிழாவுக்காக  கொசவம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த ஈரோட்டைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் குமார் (18) என்பவரை தொட்டியம் தெற்கு ரத வீதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் 

இவர் ஈரோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவரது உடலை தொட்டியம் காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிகழ்வு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரசனை ஏற்படா வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.