எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

234 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல்: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளுக்கும் திட்டமிட்டபடி நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image
Updated On :5 ஏப்ரல் 2021, 2:05 pm

DIN


தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளுக்கும் திட்டமிட்டபடி நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனிடையே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி உள்பட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 8 தொகுதிகள் வரை தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் நாளை திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சில தொகுதிகளில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்படலாம் என்ற தகவலை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.       
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.